நம்பிக்கைக்கு உரிய பங்கு அருள் பணியாளர் நடத்தும் வழிபாடுகளில் மக்கள் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்கின்றனர் - ஆய்வின் முடிவுகள்
மார்ச்,10,2014. பங்குதள மக்கள் சமய வழிபாடுகளில் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்பதற்கும், பங்கு அருள் பணியாளர் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பகத்தன்மைக்கும் நெருங்கியத் தொடர்பு உள்ளது என்று இந்தியாவின் கோவாவில் அண்மையில் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
அருள் பணியாளர் ஒருவர், திறமையுடையவராக, நம்பிக்கைக்கு உரியவராக, நல்மனம் கொண்டவராக, மக்களுக்கு நெருக்கமானவராக, மற்றும் மக்கள் பணியில் தன்னையே அர்ப்பணிப்பவராக இருக்கும்போது, அவர் முன்னின்று நடத்தும் வழிபாடுகளில் மக்கள் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்பது கண்கூடாகத் தெரிகிறது என்று Pilar துறவுச் சபையைச் சேர்ந்த அருள் பணியாளர் Peter Raposo அவர்கள் மேற்கொண்ட ஓர் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
அருள் பணியாளர்களின் நம்பகத்தன்மையைச் சார்ந்து, விசுவாசிகளின் சமய நடவடிக்கைகளின் பங்கேற்பு இருப்பதால், அதற்குகந்த பயிற்சியை, அருள் பணியாளர்களாக விழையும் இளையோருக்கு வழங்கவேண்டிய அவசியத்தையும் இந்த ஆய்வை மேற்கொண்டோர் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment