Wednesday, January 15, 2014

நட்டாலத்தில் ஆயர் பீட்டர் ரெம்யுஜியஸ் -ன் க(கா)ல்வாரி பயணம்

ஜனவரி 14 2014, அருளாளர் தேவசகாயம் பிள்ளை பிறந்த ஊரான நட்டாலத்தில் திருத்தல திருவிழாவிற்கு திருப்பலி நிறைவேற்ற வந்த தமிழக ஆயர் பேரவையின் தலைவர், கோட்டார் மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெம்யுஜியஸ் அவர்கள் தன் டைரியில் குறித்து வைத்து கொள்ள  வேண்டிய கல்வாரி (கால்வாரி) பாடுகள்.

நிலை 1: திருத்தல பங்கு மக்கள் (ஆண்கள் / பெண்கள் / குழந்தைகள் உட்பட) தங்கள் கோரிக்கை பதாகைகளை கையில் பிடித்த வண்ணம் நுழைவு வாயிலை முற்றுகை இடுகின்றனர்.

நிலை 2: ஆயரின் கைக்கூலிகள் (பிங்க் ஷர்ட் அணிந்து நிற்பவர்கள் / அவர்கள் பங்கிலுள்ள மக்கள் அல்ல)  நுழைவு வாயிலை முற்றுகையிட்ட மக்களிடம் வாக்குவாதம் செய்கின்றனர். ஆயர் தன் வாகனத்தில் வந்து இறங்குகிறார்.








நிலை 3: கிளர்ந்து நிற்கும் தன் ஆடுகளை (மக்களை) பார்த்து சமாதானப்படுத்த முயலாமல், அவருடைய குறைகளை கேளாமல் (தன் வழக்கமான) மாற்று வழியை நாடுகிறார் ஆயர்.


நிலை 4: அருளாளர் தேவசகாயம் பிள்ளையின் இடிந்து கிடக்கும் வீட்டின் சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைய முற்படுகிறார். (எவன் இந்த ஐடியா கொடுத்தான்ணு தெரியலியே)






நிலை 5: ஐடியா கொடுத்தவனே கீழே தள்ளி விட்ட கொடுமை. பாவம் வயசான இந்த காலத்தில அவர் மக்களை நேர் கொண்டு பேசி, அவங்க கோரிக்கையை கேட்டு சமாதானம் ஆயி பின் நேராகவே மேடைக்கு வந்திருக்கலாம். (யார் அந்த வெள்ளை உடை தரித்த கருப்பு ஆடு, ஆயரின் கால் வாரி விட்டவன்)



நிலை 6: ஒரு வழியா உருண்டு புரண்டு, அருளாளர் தேவசகாயம் பிள்ளையின் இடிந்து கிடக்கும் வீட்டின் அடுக்களை (சமையல் கட்டு) வழியாக தன் பரிவாரங்கள் புடைசூழ வருகிறா......ர்





நிலை 7:  கடைசியாக போலீஸ் பாதுகாப்புடன் மேடையில் திருப்பலி நிறைவேற்றம். (ஏன் ரெண்டு போலிஸ்காரங்களை சீட பிள்ளைகளுக்கு பதிலாக நிறுத்தலாமே?)


மக்களின்  வெறுப்புக்கு உள்ளாகும் ஆயரே! நட்டாலம் ஒரு தொடக்கம் மட்டுமே.

4 comments:

  1. அருட்பணியாளர்களை
    ஆண்டவராகப் பார்த்தோம்!
    அந்த காலம் கழிந்துவிட்டது....
    கண்மூடி ஆன்மீகத்தை
    கை கழுகி விட்டார்கள் மக்கள்!
    ஆயன்களெல்லாம் ஆசான்களாய்!
    சாமிகள் பலரும் ஆசாமிகளாய்!
    மக்கள் விரும்புவதை மக்களுக்காக்கி
    மறுமலர்ச்சிக்கு வழி காட்டாது
    மாற்று வழியில் யோசிக்கும்
    மமதைகள் மாறாத வரை....
    அநீதிக்கு அடிபணியாது
    அன்பின் கூட்டமாம்
    இறைமக்கள் சங்கமம்!

    ReplyDelete
  2. He is not a correct personality to continue that grate post " Bishop of Kottar" He is a very good political man. In your district first planned medical college is your St.Xaviers catholic college of medical science. but he dint take care about this. Now he planed lately a new medical college in Muttom at the name of your saint DEVA SAHAYAM and he started the work also. then your pope also given to the permission to separate the diocese at the name of Kottar & Kuzhuthurai. but he is the only personality did not submit the exact report to Vatican .So he didn’t care about your newly formed diocese and your peoples


    ReplyDelete
  3. கள்வர்களின் குகை ஆகும்
    வேதசாட்சி பிறந்த மண்.......
    எனக்கு தெரிந்து
    என் கணமுன் நடக்கும் சில கொடுமைகள்.....
    1.திருத்தல பெயர் சொல்லி வசூலிக்கும் நன்கொடை,நிதியின் கணக்கு இதுவரை இல்லை.
    2.திருத்தல பெயர் சொல்லி ஆடம்பரமாக வாழும் சிலர்....
    3.வெள்ளிக்கிழமை வரும் காணிக்கை எங்கே செல்கிறது.....
    4.அடி ஆட்களின் செல்வாக்கில் ஒரு பணியாளரின் பணி??.....

    இன்னும் பல...................?

    ReplyDelete