குழித்துறை மறைமாவட்டம்
ஓன்று படுவோம் !! செயல்படுவோம் !! நிறைவாழ்வு பெறுவோம்!!!
Thursday, June 25, 2015
Monday, April 13, 2015
மாபெரும் மனிதச் சங்கிலி போராட்டம் : 14 ஏப்ரல் 2015, மாலை 4.00 முதல் 5.00 மணி வரை
மாபெரும் மனிதச் சங்கிலி போராட்டம்
கிறிஸ்தவ மக்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பாலியல் கொடுமைகளை கண்டித்து இன்று நடைபெறும் மனிதச் சங்கிலி போராட்டத்தில் திரளாக கலந்து கொள்வோம்.
நாள்: 14 ஏப்ரல் 2015, மாலை 4.00 முதல் 5.00 மணி வரை
ஒவ்வொரு பங்கு தளத்திற்கும் ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில் குழுமி மனித சங்கிலித்தொடர் அமைத்து நமது ஒற்றுமையை காட்டுவோம்.
Monday, December 22, 2014
குழித்துறை மறைமாவட்டம் திருத்தந்தையால் அறிவிக்கப்பட்டுள்ளது
திரித்துவபுரம், முளகுமூடு வட்டார இறைமக்களை இணைத்து நடத்திய மாபெரும் மக்கள் இயக்கங்கள் மற்றும் போராட்டங்களின் விளைவாக இன்று "குழித்துறை மறைமாவட்டம்" திருத்தந்தையால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மறைமாவட்டத்தின் முதல் ஆயராக மேதகு. ஜெரோம் தாஸ் வறுவேல் SDB, Director of Novices அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம் - அருளாளர் தேவசகாயம் பொதுநிலையினர் இயக்கம்.
See: http://www.news.va/en/news/rinunce-e-nomine-1902-3
Erection of the Diocese of Kuzhithurai (India) and appointment of the first Bishop
The Holy Father erected the new diocese of Kuzhithurai (India) with territory taken from the Diocese of Kottar, making it a suffragan of the metropolitan see of Madurai, and appointed the first Bishop of the Kuzhithurai Rev.do P. Jerome Dhas Varuvel, SDB, Director of Novices .
Statistical Data
Kottar Kottar before division after division Kuzhithurai sq km area. 1,665 750 915 885 865 855 485
Inhabitants 1.74135 million Catholics 524 706 260 484 264 222 181 81 100 Parishes Mission Stations 171 48 123 294 193 101
Diocesan Priests Religious Priests Religious Brothers 67 37 30 14 12 2 738 471 267 Religious Seminarians 166 93 73
The new diocese of Kuzhithurai (nom. lat. Kuzhithuraien / sis /), bordered to the north and northeast with the Diocese of Palayamkottai; to the east and south with the diocese of Kottar-mother; south-west by the Indian Ocean; and to the west with the Archdiocese of Trivandrum and the Diocese of Neyyattinkara (in the State of Kerala). The Cathedral is the church based in Thirithuvapuram, Kuzhithurai, dedicated to the Holy Trinity.
Rev.do P. Jerome Dhas Varuvel, S.D.B.
The Rev.do P. Jerome Dhas Varuvel, SDB, was born October 21, 1951 in Paduvoor, diocese of Kottar.
He attended Carmel Secondary School in Nagercoil. From 1967 to 1968 he followed the pre-university course at the Scott Christian College, Nagercoil.
From 1968 to 1970 he attended the minor seminary at St. Aloysius Seminary in Nagercoil. He studied philosophy at Sacred Heart Seminary in Poonamallee (1970-1973). In 1976 he decided to join the Salesians of Don Bosco.
After completing the pre-novitiate (1976-1977) and novitiate (1977-1978), made his religious profession temporary 24 May 1978.
On 24 May 1981 he made his perpetual vows. From 1981 to 1986 he studied theology at the Salesians in Rome.
He has a Bachelor's Degree in Economics and in Theology and a Licentiate in Pedagogy at the Pontifical Salesian University in Rome.
He was ordained priest by St. John Paul II on 2 June 1985. It belongs to the Salesian Province of Chennai, Tamil Nadu.
After ordination he held the following positions:
1985-1986: Completion of studies at the Pontifical Salesian University (Rome);
1986-1990: Vice-Rector of the Novitiate in Vellakinar;
1990-1992: Rector of the Pre-Novitiate in Tirupattur;
1992-1994: Rector of the Pre-Novitiate in Maiyam;
1994-1996: Dean of Student Salesian Trichy;
1996-2001: Pastor-Rector of the Con-Cathedral of Madras-Mylapore;
1999-2003: Provincial Councillor;
2001-2002: Director of Kalvi Attics of Tirupattur;
2002-2003: Director of Kalvi Attics Ennore;
2003-2010: Director of Mount Don Bosco in Thalavadi.
Since 2010 he is Director of Novices at Yeallagiri Hills, Diocese of Vellore.
Friday, March 14, 2014
நம்பிக்கைக்கு உரிய பங்கு அருள் பணியாளர் நடத்தும் வழிபாடுகளில் மக்கள் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்கின்றனர் - ஆய்வின் முடிவுகள்
நம்பிக்கைக்கு உரிய பங்கு அருள் பணியாளர் நடத்தும் வழிபாடுகளில் மக்கள் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்கின்றனர் - ஆய்வின் முடிவுகள்
மார்ச்,10,2014. பங்குதள மக்கள் சமய வழிபாடுகளில் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்பதற்கும், பங்கு அருள் பணியாளர் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பகத்தன்மைக்கும் நெருங்கியத் தொடர்பு உள்ளது என்று இந்தியாவின் கோவாவில் அண்மையில் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
அருள் பணியாளர் ஒருவர், திறமையுடையவராக, நம்பிக்கைக்கு உரியவராக, நல்மனம் கொண்டவராக, மக்களுக்கு நெருக்கமானவராக, மற்றும் மக்கள் பணியில் தன்னையே அர்ப்பணிப்பவராக இருக்கும்போது, அவர் முன்னின்று நடத்தும் வழிபாடுகளில் மக்கள் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்பது கண்கூடாகத் தெரிகிறது என்று Pilar துறவுச் சபையைச் சேர்ந்த அருள் பணியாளர் Peter Raposo அவர்கள் மேற்கொண்ட ஓர் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
அருள் பணியாளர்களின் நம்பகத்தன்மையைச் சார்ந்து, விசுவாசிகளின் சமய நடவடிக்கைகளின் பங்கேற்பு இருப்பதால், அதற்குகந்த பயிற்சியை, அருள் பணியாளர்களாக விழையும் இளையோருக்கு வழங்கவேண்டிய அவசியத்தையும் இந்த ஆய்வை மேற்கொண்டோர் தெரிவித்துள்ளனர்.
Saturday, March 8, 2014
திருஅவையின் சொத்துக்களைப் பராமரிப்பது குறித்து
திருத்தந்தை பிரான்சிஸ் : துறவற சபைகளின் சொத்துக்கள் பராமரிக்கப்படுவதில் ஒளிவுமறைவின்மை வெளிப்பட வேண்டும்
மார்ச்,08,2014. துறவற சபைகளின் சொத்துக்கள் பராமரிக்கப்படுவதில் ஒளிவுமறைவின்மை வெளிப்பட வேண்டும் மற்றும் ஏழைகள், துன்புறுவோர் போன்றோரின் பொருளாதார, நன்னெறி மற்றும் ஆன்மீகத் தேவைகள் நிறைவேற்றப்படுவதில் கவனம் செலுத்தப்பட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
துறவற சபைகள் திருஅவையின் சொத்துக்களைப் பராமரிப்பது குறித்து உரோமையில் இச்சனிக்கிழமையன்று தொடங்கியுள்ள இரண்டு நாள்கள் அனைத்துலக கருத்தரங்குக்கு செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் இவ்வாறு கேட்டுள்ளார்.
துறவற சபைகள் தங்களின் சொத்துக்களைப் பராமரிப்பது, நிர்வகிப்பது, அவற்றைப் பயன்படுத்துவது குறித்து மதிப்பீடு செய்யும்போது, ஒவ்வொரு துறவு சபையும் தனது தனிவரத்துக்கும், ஆன்மீகப் பாரம்பரிய வளங்களுக்கும் பிரமாணிக்கமாய் இருக்க வேண்டுமெனவும் கேட்டுள்ளார் திருத்தந்தை.
இக்காலத்தில் எண்ணற்ற துறைகளில் ஏற்படும் மாற்றங்களும், முன்னேற்றங்களும் இன்றைய மனிதரின் வாழ்விலும் முக்கியமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன எனக் கூறியுள்ள திருத்தந்தை, உலகில் ஏழ்மைநிலை குறைக்கப்பட்டிருந்தாலும், மனிதரின் செயல்பாடுகள் ஒரு சமத்துவமற்ற பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு உதவி வருகின்றன எனவும் அச்செய்தியில் கூறியுள்ளார்.
சொத்துக்களை நிர்வகிப்பதில் விவேகத்தோடும், ஒளிவுமறைவின்றி வெளிப்படையாகவும் செயல்படுவதில் துறவற சபைகள் விழிப்புடன் இருக்குமாறும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏழைகள், நோயாளிகள், சிறார், ஒடுக்கப்பட்டோர் ஆகியோரில் ஏழைக் கிறிஸ்துவின் சதையைத் தொட்டு வறுமையைக் கண்டுணருமாறுக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ், இறைபராமரிப்பில் நம்பிக்கை வைக்கத் தூண்டும் நற்செய்தி அறிவுரையின்படி, தன்னலத்தைத் துறந்து ஏழைகள், துன்புறுவோர் போன்றோரின் பொருளாதார, நன்னெறி மற்றும் ஆன்மீகத் தேவைகள் நிறைவேற்றப்படுவதில் கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.
Sunday, January 26, 2014
அருளாளர் தேவசகாயம் பொது நிலையினர் இயக்கம் (ADPI) நடத்திய தர்ணா போரட்டத்தில் கலந்து கொண்ட மக்கள்
குழித்துறை மறைமாவட்டம் பிரகடனப்படுத்தி தனி ஆயரை நியமிக்க கோரி அருளாளர் தேவசகாயம் பொது நிலையினர் இயக்கம் (ADPI) நடத்திய பெரும் திரள் தர்ணா
இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, நாகர்கோவில்
நாள்: 25.01.2014 சனிக்கிழமை
நேரம்: காலை 9.00 முதல் 1.00 மணி வரை
தர்ணா போரட்டத்தில் கலந்து கொண்ட மக்களின் ஒரு பகுதியினர்
தர்ணா போரட்டத்தில் கலந்து கொண்ட பெண்களில் ஒரு பகுதியினர்
தர்ணா போரட்டத்தில் கலந்து கொண்ட சிறுவர்கள்
இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, நாகர்கோவில்
நாள்: 25.01.2014 சனிக்கிழமை
நேரம்: காலை 9.00 முதல் 1.00 மணி வரை
தர்ணா போரட்டத்தில் கலந்து கொண்ட மக்களின் ஒரு பகுதியினர்
தர்ணா போரட்டத்தில் கலந்து கொண்ட பெண்களில் ஒரு பகுதியினர்
தர்ணா போரட்டத்தில் கலந்து கொண்ட சிறுவர்கள்
Subscribe to:
Posts (Atom)